×

ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி. மார்ச் 6: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி உறையூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் அயிலை சிவசூரியன், கவுன்சிலர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எழுதிகொடுத்தபடி விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை சட்டத்தையும் பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாய குடும்பங்களுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கேட்டுள்ள பேரிடர் நிவாரண நிதி ரூ.37000 கோடியை உடன் வழங்க வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகம் கட்ட உள்ள மேகதாது அணைக்கான வரைவு அறிக்கைக்கு அனுமதி கொடுக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : union government ,Trichy ,Tamil Nadu Farmers' Association ,president ,Ramesh ,Trichy Varayur ,Deputy Secretary of State ,Indrajith ,Farmers' Association ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...